ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனைக்கு தீயிட்டு கொழுத்தியதும், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீப விழா யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதிக்கு எதிரே கிழக்கு ரத வீதியில் இரு சொக்கப்பனைகளை கோயில் நிர்வாகம் அமைத்தது. பின் ஈஸ்வரர் திருபுரசூரனை வாதம் செய்யும் நிகழ்வை நினைவு கூறும் விதமாக, நேற்று இரவு 7:50 மணிக்கு சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் குருக்கள் சொக்கப்பனைக்கு தீயிட்டு கொழுத்தினர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவசிவ என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.