திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் உற்சவத்தில், அய்யங்குளத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் தெப்பத்தில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீபத்தை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் காலை முதல், விடிய விடிய கிரிவலம் சென்று, மஹா தீப தரிசனம் செய்து வழிபட்டனர். தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் உற்சவத்தில், திருவண்ணாமலை அய்யங்குளத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் தெப்பத்தில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.