அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு நடந்தது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் அன்னூர், பெரிய அம்மன் கோவிலில், வாழை மரங்களில், தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. பெரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் தீபகம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்திலும் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். சொக்கப்பானை கொளுத்தி வெடி வெடித்து தீப வழிபாடு செய்தனர். கரி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள் பாலித்தார். அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவிலிலும், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.