விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் லோகநாயகி சமேத பாபவிநாசர் கோயிலின் பாலாலயத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கணபதி நடந்தது. பாபநாசம் லோகநாயகி சமேத பாபவிநாசர் கோயில் கும்பாபிஷேக பணிகளை துவக்கும் வகையில் கோயிலில் பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று (14 தேதி) நடக்கும் பாலாலயத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், காலை 4.30 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை, நடந்தது. பாலாலய நாளான இன்று (14 தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, காலை 9 ணிக்கு மேல் 10.00 ணிக்குள் பாலாஸ்தாபன தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.