திருநெல்வேலி: நெல்லை பாளையஞ் சாலைக்குமாரசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி விமான பாலாலயம் நேற்று துவங்கியது. பாலாலயம் கும்ப பூஜைகள் நேற்று மாலையில் துவங்கியது. மகம் நட்சத்திரமான இன்று (14ம் தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் பாளையஞ் சாலைக்குமார சுவாமி, மூலஸ்தான விமானம், சண்முகர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு பாலாலயம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.