ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி தனுர் மாத பிறப்பு உற்ஸவம் சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு தனூர் மாத பிறப்பு நேரமான மதியம் 3:15 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள் திருப்பாவை பட்டு அணிந்து, ரெங்கமன்னாருடன் எழுந்தருளினார். அப்போது பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் சேவா காலம், கோஷ்டி நடந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜ், பட்டர்கள் சுதர்சன், வெங்கடேஷ், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் பங்கேற்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி ஏராளமான சபரிமலை பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். இன்று (டிசம்பர் 16) முதல் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.