சூலூர்: சின்னியம்பாளையம் பொன் மாரியம்மன் கோவிலில் நிலவு கால் வைக்கும் பூஜை நடந்தது.
சின்னியம்பாளையம் கிராமத்தில் உள்ள பொன் மாரியம்மன் கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலை புதிதாக கட்ட பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு, பாலாலயம் பூஜை நடந்தது. கருங்கற்களால், கருவறை, மூன்று நிலை கோபுரம், மகா மண்டபம் கட்டும் திருப்பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், கோவிலில் நிலவு கால் வைக்க, விநாயகர் மற்றும் நவக்கிரஹ பூஜை நடந்தது. தொடர்ந்து, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் ராஜ நிலவு வைக்கப்பட்டது. சின்னியம்பாளையம், ரங்கசாமி கவுண்டன் புதூர் மக்கள் நவதானியம், பூக்கள் தூவி வழிபட்டனர். பூஜைக்குப் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.