சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி வெளியிடப்படும்: திருநள்ளாறு கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2022 11:12
காரைக்கால்: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கோவில் நிர்வாகம் அதிகாரி அருணகிரிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கம்பிரதொற்றத்துடன் உள்ளது. இக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இங்கு 2அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் பல்வேறு மாநிலத்தில் இருந்து லட்சக்கண பக்தர்கள் பகவானே தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சனி பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி எதிர்வரும் சோபகிருது மார்கழி மாதம் ( டிசம்பர் ) நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் (மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு) இடம் பெயர் உள்ளார். மேலும் சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை சோபகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தேவஸ்தான நிர்வாகம் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.