அமாவாசை: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2022 06:12
ஈரோடு : தமிழகத்தில் பிரசித்த பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை யொட்டி பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இன்று மார்கழி மாத ஸர்வ அமாவாசை என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, கோபி,நம்பியூர், திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5000க்கும் மேற்பட்டோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.