திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் உள்ள விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 38,006 வட மாலை சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.