திருக்கோவிலூர், திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ரத்தினங்கி சேவையில் சுவாமி அருள் பாலித்தார். திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு ரத்தினங்கி அலங்காரத்தில் அர்ச்சனை, லட்ச தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.