காளஹஸ்தியில் நந்தி மற்றும் பக்த கண்ணப்பா ரவுண்டானாகள்கட்டும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2022 08:12
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பிரபல ஆன்மீக தலமாக சிறந்து விளங்குவதால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் நகர எல்லை பகுதிகளில் புதியதாக ஏற்பாடு செய்து வரும் நந்தி மற்றும் பக்த கண்ணப்பா ரவுண்டானாகள் அருகில் புதிதாக (நிர்மானிக்கும் ) கட்டும் பணிகளை இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அரங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு பரிசீலித்தார்.மேலும் அவர் பேசுகையில் வெளி ஊர்களிலிருந்து ஸ்ரீ காளஹஸ்திக்கு வருபவர்கள் ஆன்மீக மனநிலையை உருவாக்கும் வகையில் நகருக்குள் நுழையும் போது பக்தர்களின் மனநிலை அமையும் வகையிலும் கண் கவரும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இவற்றை கட்டப்படுவதாக தெரிவித்தார். நெல்லூரில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வரும் சாலையில் பசவைய்யப்பாளையம் சோதனை சாவடி அருகில் ரூபாய் 19 லட்ச செலவில் நந்தி ரவுண்டானா ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார் . மேலும் இந்த சாலையில் வருபவர்களுக்கு நந்தி சிலையை பார்க்கையில் ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்துள்ளோம் என்ற பாவனையுடன் ஆன்மீக ஆனந்தம் அடையும் வகையில் இந்த ரவுண்டானாவை அமைத்து வருவதாக தெரிவித்தார். இதே போல் சென்னையில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வரும் வழியில் தனியார் மருத்துவமனை அருகில் பக்த கண்ணப்பா ரவுண்டானாவை ரூபாய் 19 லட்சம் செலவில் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார். இங்கு பக்த கண்ணப்பர் சிவபெருமானுக்கு தன்னுடைய கண்களை அர்ப்பணிக்கும் சிலைகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் இது இச் சாலையில் வருபவர்களை கவரும் வகையில் இருக்கும் என்றார் . வரும் ஆண்டு 2023 ஆண்டின் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார். இதே போல் நகரம் முழுவதும் சிவ நாம ஸ்லோகத்தோடு(ஸ்மரணத்தோடு) ஆன்மீக சிந்தனை உருவாக்கும் வகையில் மைக்குகளை அமைக்க உள்ளதாக தெரிவித்தார் . திருமலை ஏழு மலையான் கோயில் போன்று ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திலும் வெளியூரிலிருந்து வருபவர்கள் அடி எடுத்து வைத்தால் ஆன்மீக சூழல் உருவாக்கும் வகையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு முயற்சி செய்து வருவதாக அஞ்சூரு.சீனிவாசலு தெரிவித்தார்.