இன்று டிசம்பர் 30. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி பிறந்த நாள் நாள் ஆகும் ரமண மஹரிஷி, - தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் அருப்புக்கோட்டை நகரின் அருகிலுள்ள திருச்சுழியில் 1879-ம் ஆண்டு பகவான் ரமணர் பிறந்தார் ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை மீதான நாட்டம் இவருக்கு உண்டானது பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது.
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. ரமணரின் முக்கியமான உபதேசம் நான் யார் என்னும். ஞான மார்க்கமாகும் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான நான் யார்? என்ற புத்தகம் முதன்மையானதாகும். ஆதி சங்கரரின் ஆக்கமான ஆத்ம போதம் தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார். இவர் மறைந்தது 1950இல். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ரமண ஆசிரமம், உலகப் புகழ் பெற்றதாகும்.