பதிவு செய்த நாள்
30
டிச
2022
01:12
சாத்தான்குளம்: கட்டாரிமங்கலம், அழகிய கூத்தர் கோவிலில் , திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பேய்க்குளம் அருகே, நடராஜரின் பஞ்சவிக்கிர ஸ்தலமான கட்டாரிமங்கலம், சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடந்தது. காலையில் கணபதி ஹோமம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் ஜன., 6ம் தேதி வரை 10 நாட்களும், பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் பெறுகிறது. 10ம் நாள் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை 3:00 ணிக்கு கணபதி ஹோமம், 4:00 ணிக்கு சுவாமி அபிஷேகமண்டபத்தில் எழுந்தருளல், 4:30 மணிக்கு ராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம், 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தாண்டவ தீபாராதனை, 8:00 மணிக்கு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் அருளாசி வழங்குதல் நடைபெறுகிறது. பகல் 12:00 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா மற்றும் பூஜைகள் இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.