திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 06:12
காரைக்கால்: காரைக்காலில் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சனிஸ்வர பகவான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ்.புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் திருநள்ளாறு கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகைப்புரிந்தனர்.முன்னதாக புனித திருத்தமான நளன் குளத்தில் பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடிவிட்ட பின்னர் பக்தர்கள் மார்கழி கடும்பனிப்பொழிவில் நீண்ட நேரம் காத்திருந்து பத்தர்கள் சனிஸ்வரபகவானை தரிசனம் மேற்கொண்டனர். இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்ட சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டர். பின்னர் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தேஷங்கள் நிறைவேற்றினர்.மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சீனியர் எஸ்.பி.. லோகோஸ்வரன் தலைமையில் எஸ்.பி. சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈெடுப்பட்டனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் கோவில் வாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் கூவிந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.எனவே வரும்காலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தார்.