பதிவு செய்த நாள்
03
ஜன
2023
07:01
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற திருக்கோயிலாகும். இங்கு. நேற்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து , பரமபதவாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனைகளை தொடர்ந்து பக்தர்கள் கோசத்துடன் பரமபத வாசல் வழியாக காலை 6:40 மணியளவில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்சேவை செய்து வரவேற்க, பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தாடிக்கொம்பு, வேடசந்தூ,ர் திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கோயில் செயல் அலுவலர் முருகன், கோயில் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.