மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள தென்திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சிறுமுகை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் தென்திருப்பதி வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதிகாலை, 12:30 மணிக்கு நடை திறந்து, ஆதி வராத பெருமாள் திருப்பள்ளியெழுச்சியும், சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை, 4:30 மணிக்கு வைகுண்ட வாசல் நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து தொழிலாளர்கள், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், மலைப்பசாமி திருவீதி உலா புறப்பாடு நடந்தது. மாலையில் ராப்பத்து உற்சவம் தொடங்கியது.