காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 12:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை யொட்டி அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.தற்போது கோயிலில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் பாலாலயத்தில் உள்ள உற்சவமூர்த்தியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காளஹஸ்தி சிவன் கோயில் அதிகாரிகள் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் ஸ்ரீ காலஹஸ்தி சிவன் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி ஸ்ரீ ஞான பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரர்களின் உற்சவமூர்த்திகளுக்கு பலவித சுகந்த வாசனையுடன் கூடிய மலர்களாலும் (சொர்ண) தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் மேளதாளங்கள் வேத மந்திரங்கள் முழங்க சாமி அம்மையார்கள் ஊர்வலமாக நான்கு மாட வீதிகளில் தங்க சேஷ வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் தங்க யாழி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் நான்கு மாத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் கற்பூர ஆரத்திகள் சமர்பித்து வழிபட்டனர்.