இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2023 08:01
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை நந்தியம்பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி அபிஷேகம் அலங்காரம் ஆராதனை தீபாராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறைவலம் வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷம் பூஜை நிறைவு பெற்றது. தலைமை அர்ச்சகர் தர்மராஜ் சிவம் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்கள் வழங்கினார். கோயில் கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.