திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2023 11:01
திருவண்ணாமலை : மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி திதி, நாளை அதிகாலை, 2:26 மணி முதல், 7ம் தேதி அதிகாலை, 4:20 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.