பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரை உற்ஸவத்தை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சியின் நடைபெற்றது.
பழநி, கிழக்கு ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை உற்ஸவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது அதன் பின் ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் திருவெம்பாவை 20 பாடல்கள் பாடி உற்ஸவம் நடைபெற்றது. இன்று ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற உள்ளது.