தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள விஜயராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. தஞ்சாவூர் மேலவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விஜயராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி தஞ்சாவூர் தெற்கு வீதயில் உள்ள கலியுகவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மாலை முதல் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் தேதி காலை 8.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலையில் ஐந்து மணிக்கு துவங்கி மூன்றாவது கால யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபஷேகமும், ஆராதனை நடந்தது. நேற்று மூன்றாம் தேதி காலை 7 மணிக்கு நான்காவது கால யாகசாலை பூஜை முடிந்து கடங்கள் புறபாடு நடந்தது.தொடர்ந்து காலை 9.05 மணிக்கு மூல கோபுரம் உள்ள ராஜ கோபுர கலசங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, இணை ஆணையர் இளங்கோ, உதவி ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், செயல் அலுவலர் அரவிந்தனர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், செய்திருந்தனர்.