அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் ராஜகோபுரம் வாசக்கால் பிரதீஸ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 12:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் வாசக்கால் அமைக்கும் பணி நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இதற்கான ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக ராஜகோபுரத்திற்கான கல்தூண் வாசக்கால் அமைக்கும் பணி நடந்தது. பூஜைகள் செய்யப்பட்டு, கல் தூண்கள் நிலைநிறுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.