வெள்ளி அம்பலத்தில் இருந்து வீதி உலா வந்த நடராஜர்: மதுரையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2023 03:01
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நன்னாளில் ஆருத்ரா தரிசன விழா சிவனடியார்களின் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற விழாவில் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திருவாதிரை முன்னிட்டு, கால்மாற்றி நடனமாடிய வெள்ளி அம்பலத்தில் இருந்து நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.