சிவகாசி: சிவகாசி சிவன் கோயில், முருகன் கோயில், கடைக் கோயிலில் ஆருத்ரா தரிசனம் திருவாதிரை திருவிழா நடந்தது. சிவன் கோயில், முருகன் கோயில், கடைக்கோயிலிலிருந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் சிவந்திப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். தொடர்ந்து தெற்கு ரத வீதியில் 3 கோயில்களின் தேர்கள் நிறுத்தப்பட்டது. சிவகாசி, சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.