ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2023 09:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆருத்ரா தரிசனம் யொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயில் உள்ள நடராஜர் சுவாமி சன்னதி முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளினார். பின் மாணிக்கவாசகர் திருவாசகம் பாடல் பாடும் நிகழ்வு நடந்தது. இதன்பின் நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 திரவியங்களில் அபிஷேகம், பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதன் பின் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.