இந்து சமய அறநிலைத்துறை முன்பு மாற்று மத சின்னம்: நடவடிக்கை எடுக்க மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2023 09:01
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திலிருந்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நேற்று முதல்வர் அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் அழைப்புகளில் இந்து சமய அறநிலைத்துறை முன்பு மாற்று மத சின்னம் இருப்பதாக பக்தர்கள் சொன்னதை அடுத்து 06/01/2023 இன்று அதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டியும் அதன் உண்மைத்தன்மை இருப்பின் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன் ஜி அவர்கள் தலைமையில் முதல்வர் அவர்களுக்கு மனு அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல பொதுச் செயலாளர் இந்திரஜித் (எ) செல்வா, தஞ்சை மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி ஜி, ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் ஜி, துணைத்தலைவர் விஜயன் ஜி, திருவிடைமருதூர் பொதுச் செயலாளர் ஆனந்த் ஜி கலந்து கொண்டார்.