காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2023 10:01
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் நித்திய அன்னதானத் திட்டத்திற்காக ஒரு லட்சத்து 116 ரூபாய் காண காசோலையை தெலுங்கானா மாநிலம் கொத்த கூடேம் பகுதியை சேர்ந்த மாதவி குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது. ஸ்ரீ விநாயகப் பெருமானை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை கோயில் கண்காணிப்பாளர்கள் சீனிவாஸ் மற்றும் பாபு வழங்கினார்கள்.