அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் விழா: சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2023 10:01
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் விழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், கோவில் வளாகத்தில் மகிழ்ச்சியுடன் குழுவாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.