சித்திரை - 3, 4: தனது பார்வையால் மற்றவர்களை வசீகரிக்கும் உங்களுக்கு இந்த மாதம் வீண்கவலை நீங்கும். சுபச்செலவு அதிகரிக்கும். ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்யும் புதன் இடமாற்றத்தை ஏற்படுத்துவார். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்னையில் சிக்கிக் கொள்ள நேரலாம். புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்னை தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: அங்காளம்மனை வணங்கி வர தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும். சந்திராஷ்டம தினம்: ஜன 29, 30 அதிர்ஷ்ட தினம்:பிப்.8, 9
சுவாதி: நண்பர்களின் ஆதரவால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்த முனைவீர்கள். கோபத்தை குறைத்து செயல்படுவது நன்மை தரும். அடுத்தவரின் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நன்மை தரும். அனைவரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர் பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கை யாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். அரசியல்துறையினருக்கு தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கி வர கடன் பிரச்னை தீரும். மன அமைதி உண்டாகும். சந்திராஷ்டம தினம்: ஜன 30 அதிர்ஷ்ட தினம்:பிப்.9, 10
விசாகம் - 1, 2, 3: வேகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் நீங்கள் பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். காரிய தாமதம் விலகும். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம். வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வர சகல நன்மை களும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சந்திராஷ்டம தினம்: ஜன 31 அதிர்ஷ்ட தினம்:ஜன 14, 15, பிப் 9, 10
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »