Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : தை மாத பலன் துலாம் : தை மாத பலன் துலாம் : தை மாத பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி : தை மாத பலன்
எழுத்தின் அளவு:
கன்னி : தை மாத பலன்

பதிவு செய்த நாள்

12 ஜன
2023
06:01

உத்திரம் -2, 3, 4: போட்டிகளில் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடுவீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.
பரிகாரம்: திருநள்ளாறு சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும்.
சந்திராஷ்டம தினம்: ஜன 27, 28       
அதிர்ஷ்ட தினம்:பிப் 6, 7

அஸ்தம்: தனது செயல்திறமையால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் அனுபவ அறிவையும், செயல்திறனையும் கொண்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: வாராகியை வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
சந்திராஷ்டம தினம்: ஜன 28, 29       
அதிர்ஷ்ட தினம்:பிப். 7, 8

சித்திரை - 1, 2: இனிமையான பேச்சு கொண்ட உங்களுக்கு இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். ராசிக்கு 5ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.
பரிகாரம்: நரசிம்மரை வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.
சந்திராஷ்டம தினம்: ஜன 29, 30       
அதிர்ஷ்ட தினம்:பிப் 7, 8

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar