காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி கிரிவலப் பாதையில் உள்ள அஞ்சூர் மண்டபம் அருகில் உள்ள ராமாபுரம் நீர்தேக்கத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்த ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் எந்த முயற்சியும் எடுக்காவிடிலும் ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் உள்ள தாமரைப் பூக்கள் பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனை கவனித்த ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள எம் .எம். வாடா பகுதியைச் சேர்ந்த மாத்தையா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் நினைவாக அஞ்சூரு மண்டபத்தை சீர்படுத்தியதோடு அங்கு சிவன் மற்றும் பார்வதி சிலைகளை நிறுவினார் . அதேபோல் ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் பக்தர்கள் கவரும் வகையில் சிவன் சிலையை நிறுவப்பட்டு அமைத்து வருகிறார்.அச்சிலை ஏழு அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட சிவன் சிலை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது குறித்து மாத்தையா கூறுகையில் சிவபெருமானின் தலையில் இருந்து கங்கை நீர் விழும் அபூர்வ காட்சியை உணர்த்தும் வகையில் உள்ள சிவபெருமானின் சிலையை பக்தர்கள் கண்டு மகிழலாம் என்றும் மேலும் இச்சிலையை சுற்றி மின் விளக்குகளால் இசை ( ஷோ லைட்டிங் ஷோ மியூசிகல் வாட்டர் பவுண்டேஷன்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தினார் .தன்னால் இயன்ற சேவை சிவபெருமானுக்கு செய்வதாக கருதி இதைச் செய்ததாக தெரிவித்தார் . மேலும் பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதைப் போன்று சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதாகவும் அதற்காக தன்னால் இயன்ற உதவியையும் ஒத்துழைப்பையும் தேவஸ்தானத்திற்கு கொடுக்கும் நோக்கில் தற்போது சிவபெருமானின் சிலையை ஏற்பாடு செய்ததாகவும் எதிர்காலத்தில் தனக்கு அனுமதி அளித்தால் (போட் கிளப்) ஏற்பாடு செய்வதோடு அப்பகுதியில் பூங்காவையும் அமைக்க வேண்டும் என்று தானும் தன்னுடைய நண்பர்களின் ஆலோசனை என்றும் தெரிவித்தார்.