பதிவு செய்த நாள்
13
ஜன
2023
08:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தனகோட்டிபுரம் கிராமத்தில், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனுக்கு நைவேத்திய பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ள நெல் அறுவடை செய்யும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சுவாமிகளுக்கு, தினமும் ஆறுகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதில், வெண்பொங்கல், புளிசாதம், சாப்பாடு, மிளகு சாதம் உள்ளிட்டவை, படையிலிடப்பட்டு வருகிறது. இதற்கான அரிசி உற்பத்தி செய்திட, கலசப்பாக்கம் அடுத்த தனக்கோட்டிபுரத்திலுள்ள கோவிலிற்கு சொந்தமான நிலம், 44 ஏக்கரில், இயற்கை உரங்கள் கொண்டு நெல் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், நான்கு நெல் அறுவடை இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல், கோவிலிற்கு கொண்டு வரப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு பூஜை செய்த பின், அரிசி உற்பத்தி செய்யும் பணி தொடங்கும்.