திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ராப்பத்து உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2023 01:01
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 11 நாட்களாக நடந்து வந்தராப்பத்து உற்சவம் வீடு விடை வைபவத்துடன் நேற்று, நிறைவடைந்தது. கைசிக விருத்தாந்தஸ்தலமான அழகிய நம்பிராயர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் அத்யயன உற்சவத்தில், 9 நாட்கள்நடந்து வந்தபகல் பத்து உற்சவம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த2ம் தேதியிலிருந்து ராப்பத்து உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 11நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் நடந்து வந்து ராப்பத்து உற்சவம் நேற்று மாலையில் நிறைவடைந்தது. உற்சவத்தின் நிறைவு நாளையொட்டி நேற்று, காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மாலையில் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் புறப்பாடாகி உள்பிரகாரம் சுற்றி வந்து சேவை சாதித்தார். அதன் பின் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது, தொடர்ந்து பெருமாள் மண்டபத்திற்கு எழுந்தருளினார். திருமங்கைஆழ்வார் (திருவரசு),மோட்சத்துக்கு சென்ற நாளை நினைவுறுத்தும் வகையில் , திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்தப்பட்டது. இரவில் அழகிய நம்பிராயர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக உள்ளே வந்து திருமங்கைஆழ்வார், ராமானுஜர்,சேனாதிபதியின் முன்பாக சொர்க்கவாசல் கதவு அடைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவம் தலைமையில் ஜீயர் மடம் ஊழியர்கள் செய்திருந்தனர்.