ஏரல் அருணாசலசுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2023 01:01
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் தைஅமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தைஅமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் அமாவாசைஅன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்தாண்டுக்கான தைஅமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் பரம்பரைஅக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றிவைத்தார்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . நேற்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி விசேஷ அலங்காரத்துடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் திருநாளான வரும் 21ம் தேதி முக்கிய விழாவான தைஅமாவாசை திருவிழா நடக்கிறது. விழா நிகழ்ச்சியாக அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகைதரிசனம், அபிஷேகம் மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோலம், இரவு 1ம் காலம் கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. 22ம் தேதி காலை 2ம் காலம் வெள்ளைசாத்தி தரிசனம், பச்சைசாத்தி அபிஷேகம், மதியம் 3ம் காலம் பச்சைசாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தியும், இரவு சுவாமி கோயில் மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 23ம் தேதி காலை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடல், மதியம் அன்னதானம், மாலையில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார் செய்து வருகிறார்.