புதுச்சேரி: விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் ஆலயத்திலுள்ள பாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடந்தது.வானூர் வட்டம் மொரட்டாண்டியிலுள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் காலை பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிவஸ்ரீ சிதம்பர குருக்கள் தலைமையில் கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் முன்னிலையில் நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடந்த கும்பாபிஷேகத்தில் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலய நிறுவனர் சிதம்பர குருக்களின் தாயார் சகுந்தலா அம்மாளின் விக்ரக பிரதிஷ்டையும் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.