பதிவு செய்த நாள்
16
ஜன
2023
01:01
நாமக்கல்: தை முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. நாமக்கல் நகரில், 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடப்பது வழக்கம். அதன்படி தை முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 8:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடைமாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.