போடி: கணு உற்சவத்தை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும், உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் ஆயுள், ஆரோக்கியமாக இருக்க வேண்டி திருச்சனூர் பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசித்தனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.