திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பசுக்களுக்கு கோபூஜை நடந்தது. ஆண்டாள் சன்னதி அருகே உள்ள கோசாலையில் 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளின் கழுத்தில் கரும்பு, கிழங்கு, பூவரி மாலைகள் அணிவிக்கப்பட்டது. கோயில் பட்டாச்சாரியார்களால் கோ பூஜை மந்திரங்கள் முழங்கப்பட்டு, பசுக்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அட்சதை தூவப்பட்டது. பக்தர்கள் பசுக்களை தொட்டு வணங்கினர். ஏற்பாடுகளை கோயில் பேஷ்கார் கண்ணன் செய்திருந்தார்.