லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கல்யாணம: பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2023 04:01
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவிலில் மார்கழி மாதம், 30 நாளும் காலை திருப்பாவை சாற்றுமுறை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று காலை திருப்பாவை சாற்று முறையும், அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவையொட்டி, அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை நடந்தன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, லட்சுமி நரசிம்ம பெருமாளை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.