பதிவு செய்த நாள்
17
ஜன
2023
09:01
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பார் வேட்டை வைபவம் நடைபெற்றது.
சிறுமுகை அருகில் ஜடையம்பாளையம் ஊராட்சியில், தென் திருப்பதியில் வேங்கடேச வாரி கோவில் உள்ளது. இங்கு மாட்டு பொங்கலை முன்னிட்டு, நேற்று காலை, 5:55 மணிக்கு நடை திறந்து, சுப்ரபாதம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், தோமாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, மலையப்ப சுவாமி எழுந்தருளல் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மதியம், 12.30 மணிக்கு மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பார்வேட்டை வைபவம் நடைபெற்றது. அங்கு அர்ச்சகர்கள் சுவாமியின் சார்பில் வில், அம்பை கொண்டு, வன விலங்குகளை வேட்டையாடும் வைபவம் நடந்தது. அங்கு வைத்திருந்த பொம்மை புலிகள், மான்களை அர்ச்சகர்கள் எடுத்து வந்து சுவாமியின் பாதத்தில் வைத்த பின்பு, பார்வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன், கே.ஜி. மில் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.