ஆண்டாள் பறவைகளுக்கு அன்னம் அளிக்கும் வைபவம்: பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2023 09:01
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பிறந்த வீட்டின் நலன் காக்க ஆண்டாள் பறவைகளுக்கு அண்ணமிடும் வைபவத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பறவைகளுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் கனுப் பொங்கலை முன்னிட்டு ஆண்டாள் புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாள் ஹலாதினி புஷ்கரணியில் எழுந்தருளி பிறந்த வீடு நலம் பெற பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தாயாரின் திருவடி நிலையான ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை அடுத்து ஆண்டாளுக்கு மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. ஆண்டாள் அன்னமிடும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்களது பிறந்த வீடும் உடன் பிறந்தவர்களும் நலமுடன் இருக்க தாங்கள் கொண்டு வந்த 5 வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு செய்தனர். இதில் கோயில் நிர்வாகிகள், ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் கொண்டு தரிசனம் செய்தனர்.