பதிவு செய்த நாள்
17
ஜன
2023
04:01
கூடலூர்: கூடலூர், மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழா, வாழைக்குலை வெட்டி, அலகரிக்கு கோவிலுக்கு ஊர்வலகமாக எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது
கூடலூரில் பழமையான மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மலர் நீவேந்தல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12:00 மணிக்கு தேன்வயல் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து, வாழைக்குலை வெட்டி, அதனை வாழை இலை வேஷ்டிகளில் சுற்றி அலங்கரித்து, பழங்குடியினரின் பாரம்பரிய இசையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதனை 30 தேதி வரை கோவிலில் பாதுகாப்பாக வைத்திருப்பர். 30ம் தேதி, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் விழா துவங்கிறது. தொடர்ந்து, அருள் வாக்கு நிகழ்ச்சியும், பகல் 12:00 மணிக்கு மொத்தவயல் பகுதியில் இருந்து இளநீர், தென்னம்பூ, பாக்கு வெற்றிலை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 31ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 1ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகளும்; . மாலை 6:00 மகா குருதி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு விழா நிறைவு பெறுகிறது.