சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2023 01:01
சிதம்பரம் : சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, சிறப்பு யாகம் நடந்தது.
சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் சன்னதி உள்ளது. சனீஸ்வர பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று மாலை 4:10 மணிக்கு, மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. குருக்கள் குஞ்சிதபாதம், ராஜா ஆகியோர் யாகத்தை நடத்தினர். பின், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். அனைவருக்கும் எள்ளு சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.