திருமங்கலம்: திருமங்கலம் வேங்கிட சமுத்திரத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி பாலாலயம் நேற்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் போன்றவற்றுடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு காலாகர்சனமும், 8 மணிக்கு யாகசாலை பூஜைகளும், திருமுறை பாராயணமும் நடந்தது. தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவாச்சாரியார் சங்கரநாராயணன் தலைமையில் சிவாச்சாரியாக்கள் செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி அங்கயர்கன்னி, தக்கார் சர்க்கரையம்மாள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.