காளஹஸ்தி கோயிலின் வரலாற்றையும் பெருமையையும் ஆன்லைனில் பதிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2023 10:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த பிரசன்னா - துரைசாமி தம்பதியினர் ஸ்ரீ காளஹஸ்தி கோயிலின் வரலாற்றையும் பெருமையையும் ஞானப்பிரசுனாம்பா இணையதளம் என்ற பெயரில் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். திருப்பதியில் மத்திய அரசால் இயங்கும் மகளிர் பல்கலைக்கழகத்தில் பயோநெட்ஸ் பிரிவின் (சி இ ஓ )தலைமை நிர்வாக அதிகாரி கால ராணி உதவியோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் (மஹத்யம்) வரலாறு ஆன்லைனில் பதிவு செய்ய பட்டுள்ளது. ஞானபிரசுனாம்பா.காம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தை ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு இன்று தொடங்கி வைத்தார் .இது குறித்து பயோ நெக்ஸ்ட் சிஇஓ கூறுகையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் வரலாறு குறித்து இணையதளத்தில் பதிவுச் செய்ய உதவி செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் ஆக கருதுவதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு பேசுகையில் துரைசாமி தம்பதியினருக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீதுள்ள பக்தியினால் கடவுளின் மகத்துவத்தை பெருமையை இணையதளத்தில் பக்தர்கள் அனைவருக்கும் நுணுக்கமாக தெரியும் வகையில் இணைய தளத்தில் இடம் பெற செய்தது பாராட்டுக்குரியது என்றும் தற்போதுள்ள சமூகத்தில் புத்தகப் படிப்போரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இணையதளம் மூலம் அனைத்து தரப்பு பக்தர்களும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் மகத்துவத்தை தெரியும் வாய்ப்பு இணைதளத்தில் இருக்கச் செய்தது பாராட்டக்குறியது என்றனர்.