கோயில்களில் பிரதோஷ பூஜை.. சிறப்பு அபிஷேகம் : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2023 05:01
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில், கைலாசநாதருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவகுமார், பொருளாளர் விஜய ராணி செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்தநாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலகஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கும், ஞானாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் ஆராதனை நடந்தது.