தை அமாவாசை : பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி தர்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2023 12:01
மயிலாடுதுறை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் தை அம்மாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து ஆயிரகணக்கானோர் புனித நீராடி வழிபாடு.
அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் அடையும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது கூடுதல் பலனை அளிக்கும். தை அமாவாசை தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் காவிரி சங்கமத் துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்து வருகின்றனர். தை அமாவாசை தினத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு என்பதால் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு கீரை வகைகள், பச்சை காய்கரிகள், பச்சரிசி உள்ளிடவற்றை வைத்து பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர். சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு செய்து செய்தனர்.