திருப்புத்தூரில் சீனி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2023 04:01
திருப்புத்தூர்: திருப்புத்தூர் சீதளி வடகரை சீனி விநாயகர் கோயிலுக்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. திருத்தளிநாதர் கோயில் சீதளி தெப்பக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள 110 ஆண்டுகள் பழமையான சீனி விநாயகர் கோயிலுக்கு கடந்த 1986ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது இக்கோயிலில் விநாயகர், ஆஞ்சநேயர், முருகன் சுவாமிகளுக்கும், விமானத்திற்கும் திருப்பணிகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.21 ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. ரமேஷ் குருக்கள், கணேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாளில் வாஸ்து சாந்தி, முதலாம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. காலை 6:30 மணிக்கு 2ம் கால யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து காலை 9:40 மணிக்கு சிவாச்சார்யர்களால் பூர்ணாகுதி, கடம் புறப்பாடு ஆகி காலை 10:00 மணிக்கு விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, மகா அபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கூடி கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.