பதிவு செய்த நாள்
24
ஜன
2023
10:01
கடையநல்லூர்: கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன், முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கடையநல்லுார் , கிருஷ்ணாபுரத்தில் பிரசித்தி பெற்ற கல்லகநாடி அம்மன், முப்புடாதி அம்மன் கோயில் தை பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 15ம்தேதி முதல் நாள்தோறும் கபடிதாரர்களின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் சிறப்பு பெற்ற தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. மதியம் 1மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரை, ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்கிட வடம் பிடித்து இழுத்தனர். கற்பக சுந்தரவிநாயகர் கோயில் தெரு, மிட்டா ஆபீஸ் தெரு, தேசிய நெடுஞ்சாலை வழியாக தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்தினர், கிருஷ்ணாபுரம் அனைத்து சமுதாய நாட்டாண்மைகள், இளைஞர்கள், மற்றும் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவில் கலந்து கொண்டனர்.